close
Choose your channels

சகோதரி செண்டிமெண்ட்: கமல் முன் ப்ரியங்காவை அக்காவாக ஏற்றுக்கொண்ட போட்டியாளர்!

Sunday, October 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமலஹாசன் தோன்றிய நாள் என்பதால் கலகலப்பாக சென்றது என்பதும் ஒரு சில நேரங்களில் சென்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை, அரசியல் உள்ளர்த்த காட்சிகளும் இருந்தன என்பதையும் நேற்றைய எபிசோடு பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்

இந்த நிலையில் இன்றும் கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் சுவராசியமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இன்றைய முதல் புரமோவில் அக்கா தம்பி சென்டிமென்ட் மழையை பிரியங்கா மற்றும் அபிஷேக் பிழிந்தனர்.

’இந்த வீட்டில் எனக்கு பிரியங்காவை தான் ஜாஸ்தி கிடைக்கும் என்றும் இதுக்கு மேல பேசினால் நான் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன் என்றும், எங்க அக்காதான் என்னை வளர்த்தாங்க என்றும், அக்கா திருமணமாகி சென்ற பிறகு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, அதை நான் பெரிதாக காண்பித்துக் கொள்ளவில்லை என்று கண்ணீருடன் அபிஷேக் கூற, அதற்கு பிரியங்கா, ‘நானும் அபிஷேக்கும் அக்கா தம்பி உணர்வுடன்தான் சென்று கொண்டு இருக்கிறோம், இது மிகவும் அற்புதம் என்று கூற ’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் பாடலுடன் இன்றைய முதல் புரமோ முடிவடைகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.