close
Choose your channels

தாய்லாந்தில் ஒரு தரமான சம்பவம்.. 'பிகில்' நடிகையின் பிகினி புகைப்படங்கள் வைரல்..!

Saturday, September 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான ‘பிகில்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை தனது தோழிகளுடன் தாய்லாந்து சென்று பிகினி உள்பட கிளாமர் உடையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை ரெபா ஜான். இவர் விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்ஐஆர்’ உட்பட சில தமிழ் படங்களிலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது தோழிகளுடன் தாய்லாந்து சென்ற ரெபா ஜான் அங்கிருந்து கொண்டே புகைப்படங்களை பதிவு செய்தார் என்பதும் அவரது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் படத்தில் தாய்லாந்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் தனது தோழிகளுடன் பிகினி உடை உள்பட கிளாமரான உடையில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் தண்ணீரில் ஆட்டம் கொண்டாட்டம், தாய்லாந்தின் இயற்கை காட்சிகளுடன் கூடிய புகைப்படங்கள் ஆகியவற்றை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

‘தாய்லாந்தில் ஒரு தரமான சம்பவம்’ என்பது உட்பட பல கமெண்ட்களை இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.