close
Choose your channels

முதல்முறையாக சேரன் படத்திற்கு கிடைத்த சான்றிதழ்?

Wednesday, May 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சேரன் தான் இயக்கிய முதல் படமான 'பாரதி கண்ணம்மா' படம் முதல் சமீபத்தில் வெளியான 'திருமணம்' வரை அனைத்து படங்களும் சென்சாரில் 'யூ' சான்றிதழை பெற்றுள்ளதாகவும், அவர் நடித்த அடுத்த படம் ஒன்று சென்சாரில் முதல்முறையாக 'யூஏ' சான்றிதழ் பெற்றுள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார். அந்த படம் தான் 'ராஜாவுக்கு செக்'

இதுகுறித்து சேரன் தனது சமூகவலைத்தளத்தில், 'ராஜாவுக்கு செக்.. சென்சார் முடிந்து UA சான்றிதழ் கிடைத்துள்ளது.. இயக்குனர் ராஜ்குமார் என்னிடம் இதை தெரிவிக்கும்போது உங்க படங்கள் எல்லாமே U சான்றிதழ்தான்... முதல் முறையா நாங்க அந்த ரெக்கார்ட உடைச்சுருக்கோம்னு சொன்னார்..
நான் " பரவாயில்ல.. நீங்க ட்ரெண்ட்ல இருக்கிங்கன்னு சொன்னேன். என்று கூறியுள்ளார். இந்த டுவீட்டுக்கு கமெண்ட் அளித்த ஒருவர், சேரனின் 'யுத்தம் செய்' திரைப்படம் 'யூஏ' சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து சேரன் அந்த டுவீட்டை நீக்கிவிட்டதாக தெரிகிறது.

தந்தை-மகள் உறவு குறித்த கதையம்சம் கொண்ட 'ராஜாவுக்கு செக்' படத்தில் சேரனின் மகளாக நந்தனா வர்மா என்பவர் நடித்துள்ளார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவில், வினோத் ராஜமான்யா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.