close
Choose your channels

கனவுல ஒருவேளை இறந்துட்டா, நிஜத்துலயும் செத்துருவே.. 'கான்ஜூரிங் கண்ணப்பன்' டிரைலர்..!

Saturday, November 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சதீஷ் நடித்த ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த டிரைலரில் திகில் மற்றும் காமெடி காட்சிகள் இணைந்து இருப்பதை பார்க்கும்போது படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பேய் படம் என்றாலே அது காமெடி படம் என்ற நிலை ஆகிவிட்ட நிலையில் அதில் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்' படமும் தப்பவில்லை.

தூங்கும் போது தனக்கு கனவில் பேய் வருவதாகவும், அதெல்லாம் நிஜ வாழ்விலும் நடந்து வருவதாகவும் நாசரிடம் சதீஷ் கூறுகிறார். அப்போது நாசர், ‘கனவில் வருவதெல்லாம் நிஜமாக நடக்கும், கனவில் நீ செத்துவிட்டால் நிஜத்திலும் நீ செத்து விடுவாய்’ என்று கூற சதீஷ் அதிர்ச்சி அடைகிறார்.

இதனை அடுத்து சதீஷ் குடும்பத்தினரை பேய் ஆட்டி வைக்கும் காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் நடித்துள்ள ஆனந்தராஜ், சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ஆகிய அனைவரும் காமெடியில் கலக்கி உள்ளனர். ரெஜினா பேய் கேரக்டரில் நடித்துள்ளார்.

செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ’தளபதி 68’ படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படம் நவம்பரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.