close
Choose your channels

ஜிபி முத்துவுக்கு என்ன ஆச்சு..? மருத்துவமனையில் திடீரென அனுமதி..!

Saturday, April 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக் டாக் மூலம் பிரபலமடைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் ஜிபி முத்து திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமான ஜிபி முத்து டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது பாணியில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திடீரென வெளியேறிய ஜிபி முத்து தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வருகிறார் என்பதும் அவரது காமெடி ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையும் ஜிபி முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஜிபி முத்துவுக்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் தனது உடல்நிலை குறித்து மற்ற தகவல்களை வெளியிடவில்லை என்றாலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.