close
Choose your channels

ரஜினிகாந்த்-தேசிங்கு பெரியசாமி படத்தின் நாயகி இந்த பிரபல நடிகையா?

Wednesday, July 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினி - தேசிங்கு பெரியசாமி இணையும் படத்தின் நாயகி யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது இது குறித்து தகவல் வந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

ஏற்கனவே ரஜினி நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்குவதாக இருந்த ’ராணா’ என்ற திரைப்படத்தில் தீபிகா படுகோனே தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதும் ஆனால் ரஜினியின் உடல்நிலை காரணமாக அந்தப் படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ’கோச்சடையான்’ திரைப்படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடித்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கும் ரஜினி படத்தில் தீபிகா படுகோனே தான் நாயகி என்றும் இது குறித்த அறிவிப்பு படத்தின் அறிவிப்பு வெளியாகும் போது தெரியவரும் என்று கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.