close
Choose your channels

'மாஸ்டர்' பாணியில் அஸ்வினுக்கு போஸ்டர்: டெல்லி கேபிடல்ஸ் அணி கலக்கல்!

Tuesday, February 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

482 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால் இன்னும் சில மணி நேரங்களில் இந்திய அணி வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மிகவும் அருமையாக பேட்டிங் செய்து அஸ்வின் சதமடித்தார். அதுமட்டுமின்றி தற்போது 2வது இன்னிங்சிலும் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று இந்திய அணி வெற்றி பெற்றால் அஸ்வின் தான் ஆட்ட நாயகன் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அஸ்வினின் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, அவருக்காக தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ பாணியில் ஒரு போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது

இந்த போஸ்டரில் அஸ்வின் அண்ணாவின் ’மாஸ்டர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதோடு அவர் எடுத்த ரன்கள் மற்றும் விக்கெட்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய்க்கு பதிலாக அஸ்வின் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.