close
Choose your channels

'தல 59' படத்தில் இணைந்த 'இந்தியன் 2' நடிகர்!

Monday, February 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தில் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் சமீபத்தில் இணைந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இவர் தற்போது தல அஜித் நடித்து வரும் 'பிங்க்' ரீமேக் படமான 'தல 59; படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கனவே அஜித் நடித்த 'ஜனா', உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ள டெல்லி க்ணேஷ் தற்போது மீண்டுமொருமுறை அஜித்துடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மூன்று பெண் கேரக்டர்களில் ஒருவரது தந்தையாக டெல்லி கணேஷ் நடிக்கவுள்ளதாகவும், இவரது சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது

அஜித், வித்யாபாலன், ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை. ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.