close
Choose your channels

தமிழ்ப்புத்தாண்டு ரிலீஸ் பட்டியலில் இணைந்த பிரபுதேவா படம்

Saturday, March 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் தமிழ்ப்புத்தாண்டு தின விடுமுறை நாளில் ஏற்கனவே ஒருசில படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி 2' திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவான 'தேவி' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மும்மொழிகளில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகமான 'தேவி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, கோவை சரளா, ஜெகன், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், யோகிபாபு, குருசோமசுந்தரம், நாசர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவில், அந்தோனி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.