close
Choose your channels

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட்லுக்.. ரிலீஸ் எப்போது?

Friday, June 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் அந்த போஸ்டரில் அநேகமாக ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

அந்த வகையில் சற்றுமுன் ’கேப்டன் மில்லர்’ படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது, இதில் ஒரு போர்க்களத்தில் நடுவே தனுஷ் நின்றிருக்க அவரை சுற்றி நூற்றுக்கணக்கான பிணங்கள் இருக்கும் அட்டகாசமான போஸ் உள்ளது. இந்த போஸ்டரே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் 2023 ஆம் ஆண்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர இந்த போஸ்டரில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ’கேப்டன் மில்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து அடுத்தடுத்து சில அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ படம் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.