close
Choose your channels

நீ தனியா வந்தா தலை மட்டும் தான் உருளும்: 'கேப்டன் மில்லர்' சிங்கிள் பாடல்..!

Wednesday, November 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பதும் கபீர் வாசகி எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாகவும் ஆக்ரோஷமாக இருப்பதாகவும் தனுஷின் குரல் இந்த பாடலுக்கு மிகச்சரியாக பொருந்தி உள்ளதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆங்கிலத்தில் ஆரம்பித்து அதன் பிறகு தமிழில் தொடரும் இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:

நீ தனியா வந்தா தலை மட்டும் தான் உருளும்
நீ படையா வந்தா சவமலை குவியும்
நீ நரியாய் பதுங்கினா ரோமம் கிழியும்
நீ எருவா பாய கொம்பு முறியும்

நீ ஓடி வந்தா முட்டி சிதறும்
கூடி வந்தா பல்லு உதிரும்
சாடி வந்தா சங்கு பிதுங்கும்
பறந்து வந்தா எலும்பு உடையும்

நீ தீயா வந்தா அலையாய் அடிப்பேன்
புயலா வந்தா மலையாய் தடுப்பேன்
காடா வளர்ந்தா இடியா எரிப்பேன்
ஆழ்மனசுல அழிவை விதைப்பேன்

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார் என்பதும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடிப்பு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.