close
Choose your channels

'மார்க் ஆண்டனி' படம் பார்க்க சென்ற தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

Friday, September 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை பார்க்க சென்ற தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. ஆம் இந்த படத்தின் இடைவேளையின் போது தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் திரையிடப்பட்டது

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது சுமார் மூன்று கோடி பார்வையாளருக்கு மேல் இந்த டீசர் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ’மார்க் ஆண்டனி’ படம் திரையிட்ட திரையரங்குகளில் இடைவேளையின்போது ’கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் திரையிடப்பட்ட நிலையில் பெரிய திரையில் டீசரை பார்த்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.