close
Choose your channels

தனுஷின் 'மாரி 2' படத்தின் புதிய அப்டேட்

Monday, April 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா', வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' மற்றும் பாலாஜிமோகன் இயக்கத்தில் 'மாரி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு வரும் நிலையில் தனுஷின் 'மாரி 2' திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது.

மாரி 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னை விமான நிலையம் அருகேயுள்ள பின்னி மில்லில் தொடங்கவுள்ளது. இன்றைய படப்பிடிப்பில் தனுஷ், சாய்பல்லவி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தாம்ஸ், ரோபோசங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.