close
Choose your channels

'தொடரி' சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி

Monday, September 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'தொடரி' திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் சற்று முன்னர் தணிக்கை செய்யப்பட்டது.
இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'U'சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கு பெறும் தகுதியை பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டத்தை அடுத்து இந்த படம் செப்டம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தனுஷூம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
தனுஷ், கீர்த்திசுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் உத்தமன், தம்பிராமையா, ராதாரவி, கருணாகரன், ஆர்.வி.உதயகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவும், எல்.வி.கே தாஸ் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.