close
Choose your channels

தனுஷ் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ப்ரியங்கா சோப்ரா.. டிரைலர் ரிலீஸ்..!

Tuesday, March 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த ‘சிட்டாடெல்’ என்ற வெப் தொடர் விரைவில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வர இருக்கும் நிலையில் இதன் தமிழ் ட்ரைலர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தனுஷ் நடித்த ’தி க்ரே மேன்’ என்ற படத்தை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநர்களான ரூசோ பிரதர்ஸ் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளனர். இந்த தொடரில் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் கேம் ஆப் த்ரோன் என்ற படத்தில் நடித்த ரிச்சர்ட் மேடன் உள்பட பலர் இந்த தொடரில் நடித்துள்ளனர்.

250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் அதிரடி ஆக்சன் தொடராக இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் இந்த தொடர் வெளியாக இருப்பதாகவும் 6 எபிசோடுகள் கொண்ட இந்த தொடர் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘சிட்டாடெல்’ வெப்தொடரின் இந்திய வெர்ஷனில் தான் நடிகை சமந்தா மற்றும் வருண் தவான் நடித்து வருகிறார்கள் என்பதும் இந்த தொடரை ராஜ் & டி.கே இயக்கி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இவர்கள் ஏற்கனவே சமந்தா நடித்த ‘தி ஃபேமிலிமேன்’ என்ற தொடரை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.