close
Choose your channels

'காலா'வின் அரியணை கைக்கு வருவதில் சந்தோஷம்: மஹிந்திரா சேர்மன்

Tuesday, May 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா கரிகாலன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் மஹிந்திரா நிறுவனத்தின் 'தார்' என்ற மாடல் கார் மீது ரஜினிகாந்த் கம்பீரமாக உட்கார்ந்திருப்பார். இந்த காரை தான் விலைக்கு வாங்க விரும்புவதாக நேற்று டுவிட்டரில் மஹிந்திரா சேர்மன் ஆனந்த் மகேந்திரா கூறியதை பார்த்தோம்.

மேலும் அவர் இதுகுறித்து கூறியபோது, 'சூப்பர் ஸ்டாரின் அரியணையாக இருக்கும் இந்த காரும் பெருமை அடைந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனந்த் மகேந்திராவின் இந்த டுவீட்டுக்கு பதில் அளித்துள்ள தனுஷ், 'நீங்கள் குறிப்பிடும் கார் தற்போது சூப்பர் ஸ்டாரின் படப்பிடிப்பில் உள்ளது. படப்பிடிப்பு முடிந்தவுடன் அது உங்கள் கைக்கு வரும் என்று கூறியுள்ளார்.

தனுஷின் பதிலால் சந்தோஷம் அடைந்த ஆனந்த் மகேந்திரா, 'தனது எண்ணத்திற்கு உடனே பதில் அளித்த தனுஷூக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

'காலா கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாளிலேயே மிகப்பெரிய தொழிலதிபரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று டுவிட்டரில் மிகப்பெரிய விளம்பரத்தையும் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.