close
Choose your channels

தனுஷின் ஹாலிவுட் பட படப்பிடிப்பு எப்போது?

Monday, September 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் பிசியான நாயகன், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் தனுஷ் நடித்த 'கொடி' மற்றும் 'தொடரி' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் அவர் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் முதன்முதலாக தனுஷ் இயக்கவுள்ள 'பவர்பாண்டி' படத்தின் படப்பிடிப்பும் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் தனுஷ் நடிப்பதாக இருந்த ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
ஈரான் இயக்குனர் Marjane Satrapi இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்ற கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகியாக ஹாலிவுட் நடிகை Uma Thurman நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.