close
Choose your channels

மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை.. தர்ஷாவின் கிராமத்து கெட்டப் போட்டோஷூட்..!

Thursday, February 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை தர்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை’ என்ற கேப்ஷனுடன் கிராமத்து காஸ்டியூமில் உள்ள போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா ’ருத்ரதாண்டவம்’ ’ஓ மை கோஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் ’மெடிக்கல் மிராக்கிள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ள தர்ஷா குப்தா, கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகிலும் சின்னத்திரை உலகில் பிசியாகி வருகிறார்.

இந்த நிலையில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வரும்.

இந்த நிலையில் மாடர்ன் உடைகளில் இதுவரை போட்டோஷூட் எடுத்த தர்ஷா குப்தா திடீரென ஒரு மாற்றத்திற்காக கிராமத்து கெட்டப்பில் சேலை ஜாக்கெட் அணிந்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ’மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை’ என்ற பொருத்தமான கேப்ஷன் உடன் அவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.