close
Choose your channels

பணத்தை பற்றிய ஒரு பயணம் தான் 'ரூபாய்' திரைப்படம். இயக்குனர் அன்பழகன்

Wednesday, October 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுசாலமன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்த 'சாட்டை' படத்தை இயக்கிய இயக்குனர் அன்பழகன் இயக்கிய அடுத்த படம் 'ரூபாய்'. 'கயல்' படத்தில் நடித்த சந்திரன், ஆனந்தி மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில் கிஷோர் ரவிசந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை பிரபுசாலமன் தயாரித்துள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் அன்பழகன் கூறியபோது, 'எல்லோரது வாழ்க்கையிலும் இன்றியமையாகி போன பணத்தை பற்றிய ஒரு பயணம் தான் இந்த “ரூபாய்“ திரைப்படம். லாரி டிரைவர்களான இரண்டு நண்பர்கள் தேனியில் இருந்து சவாரி ஏற்றி கொண்டு சென்னை கோயம்பேடு வருகின்றனர். பின்னர் மீண்டும் தேனி திரும்பும் வழியில் பணத்தாசை காரணமாக ஒரு சிக்கலில் மாட்டி கொள்கின்றனர். அந்த சிக்கலில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினார்களா? என்பதை காமெடி, காதல், விறுவிறுப்பு கலந்து கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை, மூணாறு, மறையூர், தேனி போன்ற இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் இசை வெளியீடு, ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.