close
Choose your channels

முத்தம் கொடுத்த ரசிகர்: கண்டுகொள்ளாத பிரபல நடிகை!

Thursday, January 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவருக்கு அவரது ரசிகர் ஒருவர் முத்தம் கொடுத்த நிலையில் அந்த ரசிகரை அவர் கண்டும் காணாமல் சென்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் சாரா அலிகான். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலி கானின் மகள் ஆவார். இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சாரா அலிகான் இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வெளியே வந்த போது ரசிகர்கள் பலர் அவருடன் செல்பி எடுக்க குவிந்தனர். அப்போது ஒரு ரசிகர் ஆர்வமிகுதியில் அவரது கையை பிடித்து கையில் முத்தம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து சாரா அலிகான் உடன் வந்த அவரது பாதுகாவலர் அந்த ரசிகரை விலக்கியுள்ளார். இருப்பினும் முத்தம் கொடுத்த சம்பவத்தை கண்டு கொள்ளாமல் சாரா அலிகான் இயல்பாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.