close
Choose your channels

கெளதம் மேனனின் தந்தையும் ஒரு நடிகரா? அதிலும் கமல் படத்தில் நடித்துள்ளாரா? ஆச்சரிய தகவல்..!

Saturday, February 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தற்போது படங்களை இயக்குவதை விட படங்களில் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் நடித்து வரும் ‘லியோ’, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ உட்பட பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் சிம்புவுடன் அவர் நடித்த ’பத்து தல’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கௌதம் மேனன் மட்டுமின்றி அவரது தந்தையும் ஒருசில படத்தில் நடித்து உள்ளார் என்றும் அதுவும் கமல்ஹாசன் படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன. கமலஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வேட்டையாடு விளையாடு’ என்ற திரைப்படத்தில் கௌதம் மேனனின் தந்தை ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார்.

கௌதம் மேனன் தந்தை கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதால் அவரது படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை கௌதம் மேனன் நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் வெளியான ஒரு சில மாதங்களில் கௌதம் மேனன் தந்தை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் ராஜிவ் மேனனிடம் உதவியாளராக இருந்தபோது கௌதம் மேனன் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ’மின்சார கனவு’ படத்தில் ஒரு சில காட்சிகளில் கௌதம் மேனன் தோன்றியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தற்போது பல திரைப்படங்களில் குணசேத்திர வேடம், வில்லன் வேடம் என பல கேரக்டர்களில் கௌதம் மேனன் நடிப்பில் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.