close
Choose your channels

'தளபதி' ரசிகராக நடிக்கும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம்

Sunday, March 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல படத்தில் தளபதி ரசிகராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்

நடிகர், இசையமைப்பாளர் என இரண்டையும் பேலன்ஸ் செய்து கோலிவுட் திரையுலகில் வேகமாக முன்னேறி வருபவர் ஜிவி பிரகாஷ். சமீபத்தில் வெளியான 'நாச்சியார்' இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்ததால் அவர் வெகு உற்சாகமாக உள்ளார்.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படங்களில் ஒன்று 'சர்வம் தாளமயம். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், தளபதி விஜய் ரசிகராக நடிக்கின்றார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், 'மெர்சல்' படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்ற போஸ்டரில் ஜிவி பிரகாஷின் படத்திற்கு கீழே 'என்றும் தளபதிக்காக பீட்டர்' என்றுள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

ஜிவி பிரகாஷ், அபர்ணா, நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 'மின்சார கனவு', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படங்களை இயக்கிய ராஜீவ்மேனன் இயக்கி வருகிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரவி யாதவ் ஒளிப்பதிவில் அந்தோனி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் இந்த ஆண்டின் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.