close
Choose your channels

பாட்ஷாவையும் தெறியையும் ஒரே நேரத்தில் முடித்த ஜி.வி.பிரகாஷ்

Friday, March 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம் இசையமைப்பாளராகவும், முன்னணி ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் தெறி' படத்தின் பாடல்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் கடந்த சில நாட்களாக இரவுபகலாக ஈடுபட்டிருந்த நிலையில் த'ற்போது இந்த படத்தின் பாடல்களின் பணியை அவர் கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.


அதே நேரத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வந்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் படப்பிடிப்பும் இன்றுடன் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில்தான் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. தற்போது இரண்டரை மாதங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் ரஜினியின் புகழ் பெற்ற 'பாட்ஷா' பட வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிரோஷா, சரவணன், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.