close
Choose your channels

ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ' ரிலீஸ் தேதி

Friday, December 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரும் பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடித்த 'கடவுள் இருக்குறான் குமாரு' சமீபத்தில் ரிலீஸ் ஆகிய நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு படமான 'புரூஸ்லீ' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

புரூஸ்லீ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பொங்கல் ரிலீஸ் என்ற வார்த்தைகளுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய தீவிர ரசிகரான ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ' படமும் அதே தினத்தில் ரிலீஸ் ஆகின்றது. நீண்ட விடுமுறை உள்ள பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகும் இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

ஜி.வி.பிரகாஷ், க்ரிதி கார்பனந்தா, ராஜேந்திரன், பாலசரவணன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.