close
Choose your channels

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நடிகை ரிதுவர்மா

Saturday, March 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு நடிகை ரிதுவர்மா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது நண்பர்களும் தமிழ், தெலுங்கு திரையுலகினர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் IndiaGlitz சார்பில் அவருக்கு எங்களது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

எஞ்சினியரிங் பட்டதாரியான ரிதுவர்மா, சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் முதலில் Anukokunda என்ற குறும்படத்தில் நடித்தார். இந்த குறும்படம் அவருக்கு சிறந்த நடிகை என்ற விருதினை பெற்று கொடுத்தது.

இதன்பின்னர் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்த ரிதுவர்மா, தமிழில் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் 'அனிதா' என்ற கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டர் அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களை பெற்று தந்தது. இந்த நிலையில் ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் துல்கர் சல்மான் ஜோடியாக 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' என்ற படத்திலும் அவர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ரிதுவர்மாவுக்கு மீண்டும் நமது பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி, இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக இருக்க வாழ்த்துகிறோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.