close
Choose your channels

சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்: வேற லெவல் எதிர்பார்ப்பு..!

Saturday, July 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கப் போகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் உள்ளது. இந்த படத்தில் இணைய உள்ள நடிகர் நடிகைகள் குறித்த செய்திகள் கசிந்து வருவதை அடுத்து இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

சிவகார்த்திகேயன் மற்றும் ஏஆர் முருகதாஸ் முதல் முறையாக இணைய உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி நடிக்க மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான ‘சீதாராமம்’ படத்தில் சிறப்பாக நடித்திருந்த இவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மிருணாள் தாக்கூர் சம்பந்தப்பட்ட காட்சிகள் டெஸ்ட் ஷூட் எடுக்கப்பட்டதாகவும் இதையடுத்து அவர் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்ற தகவல் மீண்டும் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. சிவகார்த்திகேயன் அனிருத் இணைந்தாலே அந்த படம் சூப்பர் ஹிட் என்ற நிலையில் இந்த படமும் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் சிவகார்த்திகேயன் படங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் இந்த படமாக தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.