close
Choose your channels

பகத் ஃபாசிலின் 'ஆவேஷம்' உள்பட இன்று எத்தனை படங்கள்.. ஓடிடி ரிலீஸ் தகவல்..!

Friday, May 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதும் திரையரங்குகளில் வெற்றி பெறாத சில படங்கள் கூட ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில் இன்று மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் என்னென்ன திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன என்பது குறித்து பார்ப்போம்.

முதலாவது பகத் பாஸில் நடித்த ‘ஆவேஷம்’ என்ற மலையாள திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடிக்கு அதிகமாக திரையரங்குகளில் வசூல் ஆன நிலையில் அமேசான் பிரைமில் இந்த படம் இன்று முதல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அதே அமேசான் பிரைமில் விஜய் ஆண்டனி நடித்த ’ரோமியோ’ என்ற திரைப்படம் வெளியாகிறது என்பதும் இந்த படமும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் டெண்ட்கொட்டா ஓடிடியில் ’கள்வன்’ என்ற திரைப்படம் வெளியாகிறது என்பதும் ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா, பாரதிராஜா உள்பட பலர் நடித்த இந்த படம் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

அதே போல் ’7 ஜென்மங்கள் என்ற தமிழ் படமும் பிசிநீட் என்ற ஓடிடியில் வெளியாகிறது. அது மட்டும் இன்றி ’கீதாஞ்சலி மல்லி வச்சிண்டி’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆகா ஓடிடியிலும் ஒரு சில ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படங்களும் இன்று ஓடிடியில் வெளியாகிறது என்று குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.