close
Choose your channels

'ஜவான்' படத்தில் நயன்தாராவுக்கு கொடுத்த முக்கியத்துவம்.. அட்லி செய்த தரமான சம்பவம்..!

Wednesday, July 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’ஜவான்’ திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் நிலையில் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில் இண்ட்ரோ பாடல் ஒன்றை வைத்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் உட்பட தென்னிந்திய திரைப்படங்களாக இருந்தாலும் சரி, பாலிவுட் திரைப்படங்களாக இருந்தாலும் சரி நாயகிகள் ஹீரோவை காதலிக்கும் முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களில் மட்டுமே பல திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

ஆனால் ’ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக்கான் இரண்டு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த போதிலும், தீபிகா படுகோன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த போதிலும் நயன்தாராவுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவருக்கு இன்ட்ரோ பாடல் ஒன்றை அட்லி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் நடிகை ஒருவருக்கு பாலிவுட் திரைப்படத்தில் இண்ட்ரோ பாடல் வைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ஷாருக்கான் மற்றும் தீபிகாவுக்கு ஒரு பாடல் இருப்பதாகவும், ஷாருக்கான் ஜெயிலில் இருக்கும்போது ஒரு பாடல் இருப்பதாகவும், டைட்டில் பாடல் ஒன்று இருப்பதாகவும், படம் முடியும்போது சூப்பர்ஹிட் பாடலின் ரீமிக்ஸ் பாடலையும் அனிருத் கம்போஸ் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொத்தத்தில் இந்த படத்தில் ஆறு பாடல்கள் இருக்கிறது என்பதும் அதில் ஒரு பாடல் நயன்தாராவின் இண்ட்ரோ என்ற பாடல் என்றும் இந்த பாடலை அனிருத் சூப்பராக கம்போஸ் செய்துள்ளதாகவும் தரமான சம்பவம் செய்யும் வகையில் இந்த பாடலை அட்லி படமாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.