close
Choose your channels

'இரும்புத்திரை' இயக்குனரின் அடுத்த படத்தில் மாஸ் நடிகர்

Wednesday, September 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'இரும்புத்திரை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் செய்யப்படும் மோசடி குறித்து பாமரர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த படம் இருந்தது.

இந்த நிலையில் 'இரும்புத்திரை' இயக்குனன் பி.எஸ்.மித்ரன் இயக்கும் அடுத்த படம் குறித்து கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அவருடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாஸ் நடிகர்கள் பட்டியலில் இணைந்துவிட்ட நடிகர் சிவகார்த்திகேயனின் சமீபத்தில் வெளியான 'சீமராஜா' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும் வசூலில் மாஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் பி.எஸ்.மித்ரனுடன் சிவகார்த்திகேயன் இணைவதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படமும் சமூக அக்கறையுடன் கூடிய ஒரு செய்தியை மக்களுக்கு தரும் என்றும் அதுமட்டுமின்றி இந்த படம் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் படமாகவும் இருக்கும் என்றும் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் கூறியுள்ளார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் எம்.ராஜேஷ் மற்றும் ரவிகுமார் ஆகியோர்களின் இயக்கத்தில் இரண்டு படங்கள் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.