close
Choose your channels

'அஜித் 57' படத்தின் வில்லன் இவரா? புதிய தகவல்

Thursday, June 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேதாளம்' படத்தில் சூப்பர் வில்லனாக நடித்த கபீர்சிங்கை யாரும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான 'அஜித் 57' படத்திலும் கபீர்சிங் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சிறுத்தை சிவா இயக்கவுள்ள அஜித் 57' படத்தின் வில்லன் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் இன்று கபீர்சிங் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் அஜித்துடன் 'வேதாளம்' படத்தில் நடித்த அனுபவம் எப்படி? என்று கேட்க அதற்கு கபீர்சிங் 'வேதாளம் படத்தில் நடித்த 25 நாட்களும் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். மீண்டும் அதே போன்ற மேஜிக் நாட்களுக்கான அழைப்பு வரும் என விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
கபீர்சிங்கின் இந்த மறைமுக விருப்பத்தை அஜித்தும் சிறுத்தை சிவாவும் நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.