close
Choose your channels

பிறந்தநாள் அதுவுமா? கிளாமர் புகைப்படம் வெளியிட்ட இளம் நடிகை… வைரல் புகைப்படம்!

Tuesday, May 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவரும் நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ள நிலையில் ஒருசில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ ‘தீயா வேலைசெய்யணும் குமாரு’ பேன்ற ஒருசில திரைப்படங்களில் யாரும் அறியாத சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். பின்னர் ‘ஆப்பிள் பெண்ணே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு கன்னடம், தெலுங்கு போன்ற மொழி சினிமாக்களிலும் வாய்ப்புகள் கிடைத்தன.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இயங்கிவரும் நடிகை ஐஸ்வர்யா மேனன் தொடர்ந்து தனது போட்டோஷுட் புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமூகவலைத் தளங்களில் இவருக்கு அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தனது 28 ஆவது பிறந்தநாளை நடிகை ஐஸ்வர்யா மேனன் கொண்டாடியுள்ளார். இதற்காக சிவப்பு நிறத்தில் கிளாமர் உடையணிந்த அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யாவின் பிறந்தநாள் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பிறந்த நாளிலுமா? எனக் கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர். இன்னும் ஒருசில ரசிகர்கள் ‘உயிர் உங்களுடையது தேவி‘ என்றும் ‘வாழ்த்துகள் ஐஸ்‘ என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.