close
Choose your channels

டீசரில் தளபதி, டிரைலரில் தல: அஞ்சலியின் 'பலூன்' பறப்பது எப்போது?

Wednesday, November 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெய், அஞ்சலி நடித்த 'பலூன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டீசரில் 'கத்தி' படத்தில் விஜய் தோன்றும் ஒரு காட்சி போலவே ஜெய் தோன்றிய காட்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் பணி முடிந்துவிட்டதாக தெரிகிறது. இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும், எடிட்டர் ரூபனும் டிரைலர் பணியை முற்றிலும் முடித்துவிட்டதாக கூறப்படுவதால் வெகுவிரைவில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த டிரைலரில் தல அஜித் படத்தின் காட்சி போன்ற ஒரு காட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.