close
Choose your channels

'ஜெயிலர்' ஓடிடி ரிலீஸ் இந்த தேதியிலா?அதற்குள் ரூ.500 கோடியை எட்டுமா?

Monday, August 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் வசூல் கோலிவுட் திரையுலகினர்களை பிரமிக்க வைத்துள்ளது. நான்கே நாட்களில் இந்த படம் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாகவும் ’பொன்னியின் செல்வன்’ வசூல் செய்த 500 கோடி ரூபாயை இன்னும் ஒரு சில நாட்களில் நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் நாளை சுதந்திர தின விடுமுறை நாள் என்பதால் அதிக வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 28 நாட்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் நிலையில் இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஓடிடி தரப்பிலிருந்து இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை என்பதும் விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ’ஜெயிலர்’ திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ஓடிடிக்கு வந்தால் அதிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.