close
Choose your channels

மாதவன் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்

Saturday, August 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'இறுதிச்சுற்று' வெற்றிக்கு பின்னர் மாதவனுக்கு பல வாய்ப்புகள் தேடி வருகிறது. அப்படி வந்த வாய்ப்புகளில் ஒன்றுதான் இயக்குனர் சற்குணம் இயக்கும் படம்.
முழுக்க முழுக்க கிராமிய கதையம்சம் கொண்ட இந்த படத்தில் இதுவரை பார்க்காத மாதவனை பார்க்கலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஜாக்கி ஷெராப் ஏற்கனவே தமிழில் 'ஆரண்ய காண்டம்' படத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தாய்லாந்து நாட்டில் தொடங்கவுள்ளதாகவும் அதன் பின்னர் நேபாளம், மகாராஷ்டிரா, ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 'இறுதிச்சுற்று' படத்தில் பணிபுரிந்த எடிட்டர் சதீஷ் சூர்யா இந்த படத்திற்கு எடிட்டராக பணிபுரிகிறார். சற்குணம் அறிமுகம் செய்து வைத்த ஜிப்ரான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.