close
Choose your channels

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் கவின்? அவரே சொன்ன தகவல் என்ன தெரியுமா?

Friday, May 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதையை முழுமையாக முடித்து விட்ட சஞ்சய் அதன் பிறகு ஹீரோவை தேடி வருவதாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கவினிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கவின் நடித்த ’ஸ்டார்’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிப்பது குறித்து விளக்கி உள்ளார்.

ஜேசன் சஞ்சய் ஒரு கதையுடன் தன்னை சந்தித்தது உண்மைதான் என்றும் கதையில் சில மாற்றங்கள் செய்து விட்டு மீண்டும் சந்திக்கலாம் என்று கூறியதாகவும் ஆனால் அதன் பிறகு அவர் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கவின் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இதனை அடுத்து ஜேசன் சஞ்சய் படத்தில் கவின் நடிப்பது இப்போது வரை உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஸ்டார்’ அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் சதீஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் ஒரு படமும் , நெல்சன் தயாரிப்பில் ஒரு படமும் கவின் அடுத்தடுத்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.