close
Choose your channels

முன்னணி நடிகைகளின் மாதமாக மாறிய ஜூலை!

Saturday, July 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று அல்லது நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் ஒருசில படங்கள் மட்டுமே எதிர்பார்ப்புக்குரியதாகவும், ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களாகவும் வெற்றிப்படங்களாகவும் உள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஜூலை மாதம் நடிகைகளின் ஸ்பெஷல் மாதமாக கருதப்படுகிறது. நடிகர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வரும் திரையுலகில் நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்த படங்கள் அரிதாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இம்மாதம் நான்கு முன்னணி நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்த நான்கு திரைப்படங்கள் வெளியாகிறது.

ஏற்கனவே ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த 'ராட்சசி' திரைப்படமும், சமந்தா முக்கிய வேடங்களில் நடித்த 'ஓ பேபி' திரைப்படமும் நேற்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி அமலாபால் முக்கிய வேடங்களில் நடித்த 'ஆடை' திரைப்படம் வெளியாகவுள்ளது. அதேபோல் இம்மாதம் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூலை மாதம் முன்னணி நடிகைகளின் மாதமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.