close
Choose your channels

வித்யாபாலனின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா

Sunday, February 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வித்யாபாலனின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி கொடுத்து 36 வயதினிலே' 'மகளிர் மட்டும்' மற்றும் 'நாச்சியார்' என ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார். இந்த நிலையில் வித்யாபாலன் நடிப்பில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆகிய 'துமாரி சுலு' (Tumari Sulu) என்ற படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளார். இந்த படத்தை தமிழில் ராதாமோகன் இயக்கவுள்ளார். ராதாமோகன் இயக்கத்தில் ஏற்கனவே ஜோதிகா, 'மொழி' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நடுத்தர வயது பெண்ணின் வாழ்க்கை, வானொலியில் ஆர்ஜேவாக பணியில் சேர்ந்தவுடன் எப்படி மாறுகிறது என்பதை மிக இயல்பாக வெளிப்படுத்திய இந்த படத்தில் வித்யாபாலன் சுலோச்சனா என்ற கேரக்டராகவே வாழ்ந்திருப்பார். நடுத்தர வயது பெண்மணி கேரக்டரான இந்த கேரக்டருக்கு ஜோதிகா பொருத்தமாக இருப்பார் என்றும், பல நல்ல தரமான படங்களை இயக்கிய ராதாமோகன் கைவண்ணத்தில் இந்த படம் உருவாகவிருப்பதால் நிச்சயம், ஜோதிகாவுக்கு இன்னொரு வெற்றிப்படம் உறுதி என்றும் கணிக்கப்படுகிறது.

இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில மாதங்களில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.