close
Choose your channels

சென்னையில் 'காலா' செய்த மகத்தான சாதனை

Friday, June 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் காலா செய்த மகத்தான சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நேற்று வெளியாகி உலகம் முழுவதும் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளது. நேற்று அனைத்து செய்தி சேனல்களிலும் 'காலா' வெற்றி குறித்த விவாதமே நடந்தது. ரஜினியின் இந்த வெற்றி அரசியலிலும் தொடருமா என்பதே விவாதங்களின் நோக்கமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்றைய முதல்நாளில் இதுவரை இல்லாத வகையில் சென்னையில் மிக அதிக வசூலை 'காலா' திரைப்படம் பெற்றுள்ளது. இந்த படம் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் ரூ.1,76,06,981 வசூல் செய்து சாதனை செய்துள்ளது. நேற்று சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் அதிகாலை நான்கு மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டதால் இந்த வசூல் என்று கூறப்படுகிறது.

இதுவரை சென்னையில் எந்த படமும் முதல் நாளில் இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் மிக அதிகமாக வசூல் செய்த படம் என்ற பெருமையை 'பாகுபலி 2' தக்க வைத்துள்ளது. இந்த சாதனையை 'காலா' முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.