close
Choose your channels

முடிவுக்கு வந்தது ரஜினியின் ஜோக்கர் புகைப்பட பரபரப்பு

Saturday, September 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 17ஆம் தேதி பூஜையுடன் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன் உள்பட பலர் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முதல் 'கபாலி' படத்தில் வரும் ரஜினியின் தோற்றம் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. ஜோக்கர் போன்ற கெட்டப்பில் இருக்கும் இந்த செல்பி புகைப்படம் கபாலி படத்தில் இடம்பெறும் ரஜினியின் தோற்றமா? என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித், இதற்கு தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார்.

'சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள அந்த புகைப்படம் 'கபாலி' போட்டோ ஷூட் நடைபெறும் போது எடுத்த புகைப்படம் அல்ல" என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார். 'கபாலி' படக்குழுவினர்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளதால், கடந்த சில மணி நேரங்களாக பரவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.