close
Choose your channels

முதன்முதலாக இணையும் கமல்-விக்ரம் கூட்டணி

Saturday, January 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ்நாயுடு ஆகிய படங்கள் இந்த ஆண்டு அவருடைய ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பும் மிக விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் மேலும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது

இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்தாலும் அவர் நடிக்கவில்லை என்றும் இந்த படத்தின் நாயகனாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும், 'தூங்காவனம்' படம் போலவே இந்த படமும் ஒரு பிரெஞ்ச் படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் தயாரிப்பில் பிற நட்சத்திரங்கள் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு, நளதமயந்தி, மகளிர் மட்டும் பட வரிசையில் இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.