close
Choose your channels

சிம்புவின் 50வது படத்தில் கமல்ஹாசன்?  இயக்குனர் இந்த பிரபலமா?

Saturday, June 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவின் 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்.

மேலும் சிம்புவின் 49 வது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த அறிவிப்பு சிம்பு லண்டனில் இருந்து சென்னை திரும்பியதும் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சிம்புவின் 50வது திரைப்படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி ரசிகர் மனதில் இருந்த நிலையில் அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

சிம்புவின் 50 வது படத்தை மணிரத்னம் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்தில் சிம்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் தற்போது அவரது 50 வது படத்தை மணிரத்னம் இயக்க இருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தை அடுத்து கமல்ஹாசனின் 234வது திரைப்படத்தை இயக்கும் ஆரம்பகட்ட பணிகளில் தற்போது மணிரத்னம் இருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் சிம்புவின் 50வது படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.