close
Choose your channels

இரட்டையர்கள் இயக்கத்தில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Friday, January 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் ’இந்தியன் 2’ மற்றும் நாக் அஸ்வின் இயக்கத்தில் ’கல்கி 2898’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தக்ஃலைப்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது கமல்ஹாசனின் 237 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பல வெற்றி திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணிபுரிந்த அன்பறிவ் மாஸ்டர்கள் கமல்ஹாசனின் 237 வது படத்தை இயக்குகிறார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்த வீடியோவை கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.