close
Choose your channels

விஜயகாந்த்தை நினைத்து புன்னகைக்க நிறைய இருக்கின்றது: பிக்பாஸ் மேடையில் கமல்..!

Saturday, December 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 90 வது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமல்ஹாசன், விஜயகாந்த் குறித்த தகவல்களை பிக்பாஸ் மேடையில் பார்வையாளர்கள் முன் தெரிவித்துள்ளார்.

என்னுடைய சோகத்தை, நம்மில் பலரின் சோகத்தை, இந்த மேடையில் பதிவு செய்து கொள்வதை கடமையாக நினைக்கிறேன். விஜயகாந்த்.. அவரைப் பற்றி நினைத்து கண்ணீர் சிந்தி கொண்டிருப்பதை விட, அவரை நினைத்து புன்னகைப்பதற்கு நிறைய விஷயங்கள் அவரிடம் இருக்கிறது.

இதுபோல் நாமும் வாழ முடியுமா என்பதை யோசித்தால் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமும், நாம் வாழப்போகும் வாழ்க்கைக்கு அர்த்தமும் உண்டாகும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இன்றைய முதல் புரமோவில் கமல்ஹாசன் பேசிய இந்த பேச்சை விஜயகாந்துக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சார்பில் ஒரு மிகச்சிறந்த அஞ்சலியாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.