close
Choose your channels

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த கமல்

Thursday, March 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமயமலை சென்றபோது காவிரி பிரச்சனை குறித்த கேள்விகளை தவிர்த்துவிட்டு நழுவி சென்றார். இதுகுறித்து கமல் கூறியபோது 'அவர் காவிரிக்கு மட்டுமல்ல, பல விஷயங்களில் நழுவித்தான் செல்கிறார்' என்று கூறினார்

இந்த நிலையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிவடைந்த நிலையில் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று கூறியிருந்தார்.

ரஜினியின் இந்த கருத்து குறித்து கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'ரஜினி கூறியது நல்ல கருத்துதான் அதை நான் ஆதரிக்கின்றேன்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.