close
Choose your channels

கரகாட்டக்காரன் பட நடிகை கனகாவா இவங்க? வைரல் வீடியோ

Friday, September 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான ’கரகாட்டக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து ரஜினியுடன் ’அதிசய பிறவி’ உள்பட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கடந்த 2000ம் ஆண்டுக்குப் பிறகு அவர் எந்த திரைபடத்திலும் நடிக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி இருந்த நடிகை கனகா தற்போது மீண்டும் ரீ என்ட்ரி ஆக ஆசைப்படுகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கடந்த பல ஆண்டுகளாக நான் நடிக்கவில்லை. தற்போது ட்ரெண்ட் எல்லாம் மாறிவிட்டது. தற்போதைய டிரெண்ட்டை நான் கற்று வருகிறேன். எனக்கு ஏற்ற கேரக்டர் கொடுத்தால் நிச்சயம் நடிப்பேன். எனக்கு மன உறுதி இருப்பதால் விரைவில் நான் இப்போதைய சினிமாவை கற்றுக் கொள்வேன் என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து தமிழ் திரையுலகினர் கனகாவுக்கு அவருடைய வயதுக்கேற்ற வாய்ப்பை கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.