close
Choose your channels

தீபாவளி ரேஸில் இடம் பிடித்த கவின் படம்.. நெல்சனுடன் இணையும் படத்தின் முக்கிய தகவல்..!

Thursday, May 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கவின் நடித்த ’ஸ்டார்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கவின் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. கவின் நடிப்பில், அனிருத் இசையில், சதீஷ் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரே ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாகவும் இதற்காக பிரமாண்டமான செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ’ஸ்டார்’ படம் வெளியானதும் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை 2024 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதால் தீபாவளி ரேசில் இப்போதே கவின் படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இயக்குனர் நெல்சன் தயாரிக்கும் முதல் படத்தின் ஹீரோ கவின் தான் என்று கூறப்படும் நிலையில் இந்த படம் ஒரு பிளாக் காமெடி படம் என்றும் கவின் இதுவரை நடித்ததாக வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நாளை டைட்டில் டீசர் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் இரண்டு எழுத்து ஆங்கில வார்த்தை என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.