close
Choose your channels

'வாட்டர் பேபியாக மாறிய கீர்த்தி பாண்டியன்.. செம்ம நீச்சல்குள புகைப்படம்..!

Monday, June 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் வாட்டர் பேபியாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ’கொஞ்சம் பேசினால் என்ன’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் நாயகனாக வினோத் கிருஷ்ணன் நடித்து வருகிறார் என்பதும் மேலும் சில யூடியூப் பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஹரி தஃபூசியா என்பவர் இசையமைக்கும் இந்த படத்தை கிரி முர்ஃபி இயக்கயுள்ளார்.

இந்த படத்தின் கதை, பள்ளிக்கால தோழர்கள் இருவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சந்திக்கும் போது ஏற்படும் காதல் என்று கூறப்படுகிறது. இதுவரை வெளியாகாத வித்தியாசமான செம லவ் ஸ்டோரி ஆக இந்த படம் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் சற்று முன் நீச்சல் குளத்தில் ஜாலியாக நீந்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு நடிகை ரம்யா பாண்டியன் உட்பட ஏராளமானோர் லைக்ஸ் குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.