close
Choose your channels

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் பார்ட்டி: 'லியோ' பிரபலம்.. மனைவியுடன் அட்லி.. இன்னும் யாரெல்லாம் வந்திருக்காங்க?

Wednesday, October 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனது நண்பர்களுக்கு கீர்த்தி சுரேஷ் வைத்த பிறந்தநாள் பார்ட்டியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கீர்த்தி சுரேஷ் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இயக்குனர் அட்லி, தனது மனைவி பிரியாவுடன் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் இருவரும் இணைந்து கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ’லியோ’ பிரபலம் ஜெகதீஷ், ’பரியேறும் பெருமாள்’ உள்பட பல படங்களில் நடித்த நடிகர் கதிர், உள்பட பலர் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டனர். விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சஞ்சய் மனைவியும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஆன பிரீத்தியும் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபலங்கள் உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த செல்பி புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.