close
Choose your channels

மீண்டும் கீர்த்தி சுரேஷின் கிளாமர் போட்டோஷூட்.. ரசிகர்களின் நெகட்டிவ் கமெண்ட்ஸ்..!

Friday, March 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் திரைப்படங்களில் குடும்ப பங்கான வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென கடந்த சில வாரங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் உள்ளிட்ட அவரது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது மீண்டும் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ்கள் கிடைத்து வந்தாலும் ஒரு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் என்றாலே நாங்கள் ’ரஜினி முருகன்’ கீர்த்தி சுரேஷை தான் மனதில் வைத்திருக்கின்றோம் என்றும் தற்போதைய கீர்த்தி சுரேஷ் எங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் சில ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த கிளாமர் புகைப்படங்களுக்கு 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த ’தசரா’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ’போலோ சங்கர்’ ’மாமன்னன்’ ’சைரன்’ உள்பட சுமார் ஐந்து படங்களில் கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.