close
Choose your channels

அடுத்தடுத்து 2 கீர்த்தி சுரேஷ் படங்களின் படப்பிடிப்பு நிறைவு.. எப்போது ரிலீஸ்?

Thursday, May 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ’பேபி ஜான்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் நடித்து வந்த இன்னொரு படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து உள்ளதால் இரண்டு படங்களும் அடுத்தடுத்த ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அட்லி தயாரிப்பில் உருவாகி வரும் ’தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அதன் நிறைவு விழாவில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த 'ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் தெரிவித்த நிலையில் இரண்டு படங்களும் அடுத்தடுத்த ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த ’ரிவால்வர் ரீட்டா’ படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சென்றாயன், சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ண ஒளிப்பதிவும் பிரவீன் கே எல் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர்.

‘பேபி ஜான்’, ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தற்போது இரு படங்களின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ப்ரோமோஷன் குறித்த தேதிகள் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் ’ரகு தாத்தா’ மற்றும் ’கன்னிவெடி’ ஆகிய படங்களில் நடித்து வருவதும் வருகிறார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.